சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று நடிகையும் ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சூதாட்டம் சட்டப்பூர்வம் ஆக்கப்படாததால் அது ஒரு குற்றச்செயலாகும். ஆனாலும் மறைமுகமாக சூதாட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டங்கள் ஏராளமாக நடந்துவருகின்றன. 

ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி கிரிக்கெட்டில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு கிரிக்கெட் எதிர்காலத்தையே இழந்தார் ஸ்ரீசாந்த். மறைமுகமாக சூதாட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ல வீரர்கள் தவாறாக வழிநடத்தப்பட வாய்ப்பு உள்ளதால், ஊழல் கண்காணிப்பு பிரிவு ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மிகவும் விழிப்போடு கண்காணித்து வருகிறது. லோதா கமிட்டி பரிந்துரையில் கூட சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று கூறியிருந்தது. அதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. 

இந்நிலையில், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று நடிகையும் ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பிரீத்தி ஜிந்தா, சூதாட்டத்தை அரசு சட்டப்பூர்வமாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது வருமானத்திற்கு வழிவகுக்கும். இதன்மூலம் தவறான மற்றும் சூதாட்ட தந்திரங்களை நிறுத்த முடியும். அடிக்கடி உண்மை கண்டறியும் சோதனையை ரேண்டம் முறையில் நடத்த வேண்டும். அனைவரையும் கட்டுப்படுத்த முடியாது. நான் பிடிபட்டு விடுவேன் என்று ரசிகர்கள் பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த அளவிற்கு போலீசால் மக்களை பயமுறுத்த முடியாது. அதனால் சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்று பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.