Asianet News TamilAsianet News Tamil

மும்பை நாக் அவுட் ஆனதை நினைத்து சந்தோஷப்பட்ட பிரீத்தி ஜிந்தா!! வாய்விட்டு மகிழ்ந்த வீடியோ வைரல்

preity zinta is very happy about mumbai knocked out of ipl
preity zinta is very happy about mumbai knocked out of ipl
Author
First Published May 21, 2018, 12:32 PM IST

மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது மகிழ்ச்சியாக இருப்பதாக பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிடாத பஞ்சாப் அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால், இந்த முறையும் அந்த அணியின் எண்ணம் ஈடேறவில்லை.

அஸ்வின் கேப்டன்சியில் இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய பஞ்சாப் அணி, இரண்டாம் பாதியில் சொதப்பியதால், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. முதல் 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, கடைசி 8 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

preity zinta is very happy about mumbai knocked out of ipl

ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்ற நிலையில், நான்காவது இடத்தில் ராஜஸ்தான் இருந்தது. இந்நிலையில், கடைசி 2 லீக் போட்டிகள் நேற்று நடந்தன. மாலை 4 மணிக்கு டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லியை வீழ்த்தினால் ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி மும்பை அணி, நெட் ரன் ரேட் அடிப்படையில், பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் தோல்வியை தழுவியதால் தொடரை விட்டு வெளியேறியது.

இதையடுத்து இரவு 8 மணிக்கு சென்னையும் பஞ்சாப்பும் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 153 ரன்கள் எடுத்தது. 53 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தால், ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி பிளே ஆஃபிற்குள் பஞ்சாப் நுழைந்திருக்கலாம். ஆனால் பஞ்சாப் அணி தோல்வியை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது.

preity zinta is very happy about mumbai knocked out of ipl

இந்நிலையில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே, பஞ்சாப்பால் பிளே ஆஃபிற்குள் நுழைய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. இப்படியான சூழலில், அந்த போட்டியின்போது, பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா, பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறப்போவதை நினைத்து வருத்தப்படாமல், மும்பை அணி தொடரைவிட்டு வெளியேறியதை நினைத்து மகிழ்ச்சியடைந்தார்.

Did #PreityZinta just say “I am just very happy that Mumbai is not going to the finals..Really happy” 🤔 #CSKvKXIP #MIvsDD #IPL #IPL2018 pic.twitter.com/KWaxSUZYZh
— Jo (@jogtweets) 20 May 2018

சென்னை பஞ்சாப் போட்டியை பார்த்து கொண்டிருந்த பிரீத்தி ஜிந்தா, தனக்கு அருகில் இருந்தவரிடம், மும்பை அணி தொடரை வெளியேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது(I am very very happy about mumbai are knocked out) என தெரிவித்தார்.

பிரீத்தி ஜிந்தாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
• android
• ios