Praggnanandhaa :Chessable Masters online :Magnus Carlsen:உலக செஸ் சாம்பியனும் நார்வே வீரருமான மாக்னஸ் கார்ல்செனை இந்த ஆண்டில் 2-வது முறையாக தமிழக சிறுவனும், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டருமான ரமேஷ்பாபு பிரக்னானந்தா தோற்கடித்துள்ளார்.
உலக செஸ் சாம்பியனும் நார்வே வீரருமான மாக்னஸ் கார்ல்செனை இந்த ஆண்டில் 2-வது முறையாக தமிழக சிறுவனும், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டருமான ரமேஷ்பாபு பிரக்னானந்தா தோற்கடித்துள்ளார்.

இந்த ஆண்டில் 2வது முறையாக கார்ல்செனை தமிழக சிறுவன் பிரக்னானந்தா சாய்த்து சாதனை படைத்துள்ளார்.
செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்-லைன் ரேபிட் செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5-வது சுற்றில் நார்வே வீரரும், உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்செனை எதிர்கொண்டார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்னானந்தா ரமேஷ்பாபு. இந்தபோட்டியி்ல் கார்ல்செனை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு பிரக்னானந்தா முன்னேறியுள்ளார்.
இந்த ஆட்டத்தில் கார்ல்சென் தனது 40-வது நகர்த்தலில் மிகப்பெரிய தவறு செய்துதனது பிளாக்நைட் காயினை தவறான இடத்தில் வைத்தார். இதைப் புரிந்த பிரக்னானந்தா அவரை வீழ்த்தி 5-வது சுற்றில் தனதாக்கினார். இதன் மூலம் பிரக்னானந்தா 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கார்ல்சென் 2-வது இடத்திலும் உள்ளனர். உலகின்மிக இளம்வயது கிராண்ட்மாஸ்டர் அபிமன்யு மிஸ்ராவும் இந்தப் போட்டியி்ல் பங்கேற்றுள்ளார்.

ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் கார்ல்செனை 16வயதான தமிழக சிறுவன் பிரக்னானந்தா வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து பிரக்னானந்தா கூறுகையில் “ வெற்றி பெற்றுவிட்டேன், நம்மதியாகத் தூங்கப் போகிறேன்”எ னத் தெரிவித்தார். ஆனால் கார்ல்செனுக்கு எதிரான ஆட்டத்தில் பிரக்னானந்தா 3 முக்கியப் புள்ளிகளை தவறவிட்டார்
கடந்த மாதம் நடந்த லாரோடா ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்னாநந்தா 3-வது இடத்தைப் பெற்றார்
