Asianet News TamilAsianet News Tamil

கோலியை வம்பு இழுத்தா என்ன கிழிக்கிறாருனு நாங்களும் பார்க்குறோம்.. ஆஸி., வீரர்களை கொம்பு சீவி விட்ட முன்னாள் கேப்டன்

கோலியை ஸ்லெட்ஜிங் செய்தால் அதன்மூலம் உத்வேகம் பெற்று கூடுதல் ஆக்ரோஷத்துடன் ரன்களை குவிப்பார் என்று மற்ற முன்னாள் வீரர்கள் பயந்து பேசிய நிலையில், பாண்டிங் அதிலிருந்து முரண்பட்டு, கோலியை ஸ்லெட்ஜிங் செய்யலாம் என்று கூறியுள்ளார். 

ponting encouraged australian players to sledge virat kohli
Author
Australia, First Published Dec 4, 2018, 2:45 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்று உத்வேகத்தை பெறும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தாலும் வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில அந்த அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. மேலும் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக திகழும் விராட் கோலியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி பல வியூகங்களை வகுத்துவருகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கையை பெறும் நோக்கில் முன்புபோல் அந்த அணி ஸ்லெட்ஜிங் செய்வதில்லை. ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எனினும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஸ்லெட்ஜிங் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கோலியை வம்பு இழுக்க வேண்டாம் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யலாம் என்பதே முன்னாள் கேப்டன் பாண்டிங்கின் கருத்தாக உள்ளது. 

கோலியை ஸ்லெட்ஜிங் செய்தால் அதன்மூலம் உத்வேகம் பெற்று கூடுதல் ஆக்ரோஷத்துடன் ரன்களை குவிப்பார் என்று மற்ற முன்னாள் வீரர்கள் பயந்து பேசிய நிலையில், பாண்டிங் அதிலிருந்து முரண்பட்டு, கோலியை ஸ்லெட்ஜிங் செய்யலாம் என்று கூறியுள்ளார். ஆனால் கோலியை எப்போது ஸ்லெட்ஜிங் செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். 

அதாவது கோலியை ரன்கள் எடுக்கவிடாமல் தொடக்கம் முதலே கட்டுப்படுத்தி, அவருக்கு நெருக்கடியை உருவாக்கிவிட்டு பின்னர் ஸ்லெட்ஜிங் செய்வதன் மூலம் அவரை நிலைகுலைய வைக்க முடியும். அதன் மூலம் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியும் என்பது பாண்டிங்கின் கருத்து. இதுபோன்று கோலியை வெறுப்பேற்றி ஜான்சன் சில முறை கோலியின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் என்று உதாரணமும் காட்டியிருக்கிறார் பாண்டிங். 

சும்மாவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஓவர் ஆட்டம் போடுவார்கள். இதில் பாண்டிங் வேற அவர்களை கொம்பு சீவி விட்டிருக்கிறார். கண்டிப்பாக களத்தில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios