People expecting that I want to win more championship - pv sindhu

நான் அதிக அளவில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியத்உ: “உலக சாம்பியன்ஷிப் மிகப்பெரிய போட்டியாகும். அதில் பட்டம் வெல்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். உலக சாம்பியன்ஷிப் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். அதில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றது எனது வாழ்வின் மிக முக்கியமான தருணமாகும். அதனால் இப்போது நான் அதிக அளவில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றுக் கூறினார்.