Parkviyu Open Squash update making the quarter-finals for the first time velavan
"பார்க்வியூ' ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் இறுதிச் சுற்றிற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
"பார்க்வியூ' ஓபன் ஸ்குவாஷ் போட்டி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியியாவின் வேலவன் மற்றும் இங்கிலாந்தின் மார்க் ஃபுல்லர் மோதினர்.
இதில், 12-10, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் வேலவன், மார்க் புல்லரை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
பிஎஸ்ஏ உலக டூர் தொடரில் வேலவன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.
வேலவன் தனது இறுதிச் சுற்றில் எகிப்தின் எல்ஷெர்பினியை சந்திக்கிறார்.
