Park View Open sku Wash Update Indians advanced to the quarterfinals
'பார்க்வியூ' ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால் சிங் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
'பார்க்வியூ' ஓபன் ஸ்குவாஷ் போட்டி, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைப்பெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆட்டத்தில் இந்தியாவின் வேலவன் தனது காலிறுதியில் 11-3, 11-1, 11-5 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் அகீல் ரஹ்மானை தோற்கடித்தார்.
வேலவன் தனது அரையிறுதியில் இங்கிலாந்தின் மார்க் புல்லரை சந்திக்கிறார்.
மற்றொரு ஹரிந்தர் பால் சிங் 11-7,, 11-7, 11-5 என்ற நேர் செட் கணக்குகளில் தென் ஆப்பிரிக்காவின் கேரத் நைடூவை வீழ்த்தினார்.
ஹரிந்தர் பால் சிங் தனது அரையிறுதியில் பெல்ஜியத்தின் தியாகோ கோரிலுடன் மோதுகிறார்.
