Paris Masters Action Players advanced to the fourth round by an intense game ...

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் உள்பட பல்வேறு வீரர்கள் அசத்தலான ஆட்டத்தால் நான்காவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பாரிஸீல் நடந்து வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் தென் கொரியாவின் சங் ஹியோனை எதிர்கொண்டார் ரஃபேல் நடால்.

அதில் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3-வது சுற்றில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸுடன் மோதினார் பிரான்ஸின் லூகாஸ் புய்லே. இவர், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் லோபாஸை வீழ்த்தி அடுத்த சுற்றுகு முன்னேறினார்

போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 7-6(2), 6-7(13), 6-3 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மெனை வீழ்த்தினார்.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-4, 6-7(7), 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்சிக்கை வீழ்த்தினார்.

பிரான்ஸின் நிகோலஸ் மஹட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை வீழ்த்தினார்.

ஸ்பெயினின் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தினார்.

உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் 6-7(7), 7-6(1), 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ரமோஸ் வினோலஸை வீழ்த்தினார்.