Pandya hartik lifts from the Indian squad ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டுள்ளார்.

முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாத பாண்டியா, விஜய் ஹஸாரே டிராபி போட்டியின் காலிறுதியில் பரோடா அணிக்காக விளையாடும் வகையில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியின்போதும் பாண்டியா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 16-ஆம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடங்குகிறது.

அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர், அஸ்வின், ஜடேஜா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.