Pakistan won the first match
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தியது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமைத் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 95 ஓவர்களில் 286 ஓட்டங்கள் எடுத்தது.
ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 63 ஓட்டங்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான், 138.4 ஓவர்களுக்கு 407 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியின் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 99 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷனான் கேபிரியெல், அல்ஸாரி ஜோசஃப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர், தனது 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 52.4 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
கிரன் பாவெல் மட்டும் அதிகபட்சமாக 49 ஓட்டங்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து ஆட்டத்தின் கடைசி நாளில் 32 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் தனது 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான், 10.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்று கர்சித்தது.
யாசிர் ஷா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
