பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான அசார் மெஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வரும் 17-ஆம் தேதி தொடங்கவுள்ள பாகிஸ்தான்-நியூஸிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மெஹ்மூத்தின் பதவிக்காலம் தொடங்குகிறது. அவருடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

41 வயதான மெஹ்மூத், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் தாற்காலிக பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார். அதன்பிறகு டி20 உலகக் கோப்பையின்போது முஷ்டாக் அஹமதுவுடன் இணைந்து பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.