பாகிஸ்தான் அணி, பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் அதன் கேப்டன் அசார் அலிக்கு ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும், ஓர் ஆட்டத்தில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய 5-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது பாகிஸ்தான்.

ஓர் ஆண்டுக்குள் 2-வது முறையாக பாகிஸ்தான் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலிக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும், ஓர் ஆட்டத்தில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் அசார் அலி விளையாட முடியாது.