Out West Indian player New Zealand players IPL Update
ஐபிஎல் போட்டியின் நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மேற்கிந்திய வீரர் ரஸல் நீக்கப்பட்டு, நியூஸிலாந்து வீரர் கிராண்ட்ஹோம் சேர்க்கப்பட்டுள்ளார்.
பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருக்கும் ஆன்ட்ரே ரஸலுக்குப் பதிலாக நியூஸிலாந்து ஆல்ரவுண்டரான காலின் டி கிராண்ட்ஹோம் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான ரஸல், ஊக்கமருந்து பயன்படுத்திதால் அவருக்கு ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரால் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனது.
இதனையடுத்து அவருடைய இடத்தை நிரப்பும் வகையில் டி கிராண்ட்ஹோமை தங்கள் அணியில் சேர்த்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம்.
