Oold age players going to play for csk rj balaji said

இரண்டு வருடத்திற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது.

நேற்று நடந்த வீரர்கள் ஏலத்தில் சென்னை அணிக்காக ஹர்பஜன் சிங் மற்றும் ஷேன் வாட்சன் உள்ளிட்ட பலர் வாங்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ள ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு அசத்தி உள்ளார்.இந்நிலையில், பொங்கல் விழாவின் போதிலிருந்தே தமிழை ட்வீட் செய்து வரும் ஹர்பஜன் சிங் தற்போது, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ளதால், 

ஏதோ உள்குத்து இருக்கும் என நினைக்க தோன்றுவதாக ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து வீரர்களும் 30 வயதிற்கு மேல் உள்ளார்கள், 'இது என்ன முதியோர் கிரிக்கெட்டா?' என கேள்வி கேட்டு வீடியோவை, அமெரிக்காவில் இருந்தே ட்வீட் செய்து உள்ளார் ஆர். ஜே.பாலாஜி.

Scroll to load tweet…