மலேசியா மாஸ்ட்ர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், அஜய் ஜெயராம் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்தனர்.

முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாதினியை எதிர்கொண்ட சாய்னா, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இருவருக்கும் இடையேயான ஆட்டம் 42 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

சாய்னா தனது காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் ஃபிட்ரியானி ஃபிட்ரியானியை சந்திக்கிறார்.

அதேபோல், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் அஜய் ஜெயராம், சீன தைபேவின் ஸுயேஹ் ஸுவானை எதிர்கொண்டார். இதில் ஜெயராம் 21-12, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்றார்.

ஜெயராம் தனது காலிறுதியில் இந்தோனேஷியாவின் அன்டோணி சினிசுகா கிங்டிங்கை எதிர்கொள்கிறார்.