New Zealand to face India today
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் புனேவில் இன்று நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பலமான வெற்றி பெற்ற இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராகவும் அவ்வாறே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து போட்டிகளில் விளையாடி ஃபார்மில் இருக்கும் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்த நியூஸிலாந்திடம் வீழ்ந்துள்ளது. இதனால், 2-வது ஆட்டத்தின் மூலம் மீண்டு வந்து சொந்த மண்ணில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்திய அணி உள்ளது.
அதேநேரத்தில் 2-வது ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூஸிலாந்து களம் காண்கிறது.
இதில் இந்திய அணியைப் பொருத்த வரையில், கேப்டன் கோலி, தவன், ரோஹித் மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சைப் பொருத்த வரையில், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் வேகப்பந்துவீச்சுக்கு பூம்ரா, புவனேஸ்வர் பலம் சேர்க்கின்றனர்.
நியூஸிலாந்தைப் பொருத்த வரையில் பேட்டிங்கில் ராஸ் டெய்லர் - டாம் லதாம் இணை பந்துவீச்சில் ஐஷ் சோதி பலம் சேர்க்கின்றனர்.
இந்தியா அணியின் விவரம்
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பூம்ரா, புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.
நியூஸிலாந்து அணியின் விவரம்
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், மார்டின் கப்டில், மட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னே, காலின் மன்ரோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் செளதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்கர், ஐஷ் சோதி.
