New Zealand all out for 489 runs Next time in South Africa

தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 162.1 ஓவர்களில் 489 ஒட்டங்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 285 பந்துகளுக்கு 16 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 176 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இந்த ஸ்கோர்தான் அந்த அனியின் அதிகபட்ச ஓட்டமாகும்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் மோர்னே மோர்கெல், கஸிகோ ரபாடா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 175 ஒட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 80 ஒட்ட்னகள் மட்டுமே எடுத்துள்ளது.

டூ பிளெஸ்ஸிஸ், டி காக் தலா 15 ஒட்டங்களுடம் களத்தில் இருக்கின்றனர்.

நியூஸிலாந்து தரப்பில் ஜீதன் படேல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.