New Zealand - Indias second training game takes place today ...
நியூசிலாந்து - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது.
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.
முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 22-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதனையொட்டி நியூசிலாந்து அணி இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது.
நியூசிலாந்து அணியின் வீரர்கள்:
கனே வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, கிளைன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் ஒர்க்கர்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியின் வீரர்கள்
ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, ஷிவம் சவுத்ரி, கருண்நாயர், குர்கீரத் மான், மிலின்ட்குமார், ரிஷாப் பான்ட், ஷபாஸ் நதீம், கரண்ஷர்மா, தவால் குல்கர்னி, ஜெய்தேவ் உனட்கட், அவேஷ்கான்.
