இந்திய அணியில் கோல் கீப்பர் சூரஜ் கர்கேரா, வருண் குமார், திப்சன் திர்கே, நீலகண்ட சர்மா, குர்ஜந்த் சிங், அர்மான் குரேஷி ஆகிய ஆறு புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்பிரீத் சிங் கேப்டனாகவும், சிங்லென்சனா சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் கோல் கீப்பர் சூரஜ் கர்கேரா, வருண் குமார், திப்சன் திர்கே, நீலகண்ட சர்மா, குர்ஜந்த் சிங், அர்மான் குரேஷி ஆகிய ஆறு புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்..

இது தொடர்பாக இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் கூறியது:

"ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக இளம் வீரர்களை அணியில் சேர்க்கும் முயற்சியில் இருக்கிறோம். அவர்களின் திறமையை பெல்ஜியம், நெதர்லாந்து தொடர்களில் சோதிக்க முடிவு செய்துள்ளோம்.

பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற முன்னணி அணிகளுடன் இளம் வீரர்கள் தங்களின் ஆரம்ப காலத்தில் விளையாடுவது அவர்களுடைய எதிர்காலத்துக்கு பயனளிப்பதாக அமையும்.

தற்போது இந்திய அணியினர் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பயிற்சி முகாம் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது' என்றார்.

இந்தியா - பெல்ஜியம் இடையிலான முதல் ஆட்டம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்திய அணி விவரம்:

கோல் கீப்பர்கள்:

ஆகாஷ் அனில் சிக்டே, சூரஜ் கர்கேரா.

பின்களம்:

திப்சன் திர்கே, கோதாஜித் சிங், குருவிந்தர் சிங், அமித் ரோஹிதாஸ், வருண் குமார்.

நடுகளம்:

எஸ்.கே.உத்தப்பா, ஹர்ஜீத் சிங், மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), சுமித் நீலகண்ட சர்மா.

முன்களம்:

மன்தீப் சிங், ரமன்தீப் சிங், லலித் குமார், குர்ஜந்த் சிங், அர்மான் குரேஷி.