New captain appointment to Indian womens hockey team Do you know him?

ஒன்பதாவது ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய மகளிர் அணிக்கு ராணி ராம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். 

ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி வரும் 28-ஆம் தேதி ஜப்பானின் ககாமிகாரா நகரில் தொடங்குகிறது. 

ஐரோப்பிய வலைகோல் பந்தாட்டப் போட்டி தொடரில் விளையாடிய இந்திய அணியோடு ஒப்பிடுகையில், இப்போது ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மூத்த பின்கள வீராங்கனையான சுஷீலா சானு, முன்கள வீராங்கனைகள் நவநீத் கெளர், நவ்ஜோத் கெளர், சோனிகா ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். 

புதிய பயிற்சியாளரான ஹரேந்திரா சிங் பயிற்சியின் கீழ் இந்திய மகளிர் அணி கலந்துகொள்ளவுள்ள முதல் தொடர் இந்த ஆசிய கோப்பை போட்டியாகும்.

இந்தப் போட்டி, 2018-ல் இலண்டனில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான தகுதிச் சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரிவில் சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியை சந்திக்கிறது.

இந்திய அணியின் விவரம்:

கோல் கீப்பர்கள்:

சவீதா (துணை கேப்டன்), ரஜானி எடிமார்பு.

முன்களம்:

ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா கட்டாரியா, லால்ரேம்சியாமி, சோனிகா, நவநீத் கெளர், நவ்ஜோத் கெளர். 

நடுகளம்:

நிக்கி பிரதான், நமீதா டோப்போ, மோனிகா, லில்லிமா மின்ஸ், நேஹா கோயல்.

பின்களம்:

தீப் கிரேஸ் இக்கா, சுனிதா லகரா, சுஷீலா சானு, சுமன் தேவி, குருஜித் கெளர்.