இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் செயல், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டென்னிஸ் வீராங்கனை கர்மான் கவுர் தாண்டி ஆகிய இருவரும் பிரபல வாட்ச் ஒன்றின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில், கர்மான் கவுர் தாண்டியின் கையில் வாட்ச்சை கட்டிவிட்ட கோலி, பின்னர் புகைப்படம் எடுக்கும்போது கர்மானை கீழே நிறுத்திவிட்டு சற்று உயரமான இடத்தில் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். 

கர்மான் கவுர் தாண்டி நல்ல உயரமானவர். அவருக்கு கையில் வாட்ச் கட்டும்போதே அவரை விட கோலி மிகவும் உயரம் குறைவாக தெரிவார். எனவே புகைப்படம் எடுக்கும்போது, அவருக்கு நிகராக இருக்க வேண்டும் என்பதற்காக அவரை கீழே நிறுத்திவிட்டு இவர் சற்று உயரமான இடத்தில் நின்றார். 

கோலியின் இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமரித்து வருகின்றனர். ஒரு பெண் உங்களை விட உயரமாக இருப்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு உங்களுக்கு ஈகோ இருக்கிறது என்று விமர்சித்துள்ளனர். ஒரு பெண் உங்களை விட உயரமாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, என்ன ஒரு பொறாமை? எனவும் விமர்சித்து வருகின்றனர்.