Netherlands player won in Formula 1
ஃபார்முலா 1 கார்பந்தயத்தில் ரெட்புல் அணியின் சார்பில் களமிறங்கிய நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்து அசத்தினார்.
இந்தாண்டுக்கான ஃபார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 15-வது சுற்றான மலேசிய கிராண்ட்பிரி பந்தயம் கோலாலம்பூரில் உள்ள செபாங் ஓடுதளத்தில் நேற்று நடைப்பெற்றது.
பந்தய தொலைவான 310.408 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி பத்து அணிகளைச் சேர்ந்த 19 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர்.
இதில் 3-வது வரிசையில் இருந்து புறப்பட்ட நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் ரெட்புல் அணியின் சார்பில் களமிறங்கினார். இவர் 1 மணி 30 நிமிடங்களில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.
அவரை விட 12.7 வினாடி மட்டுமே பின்தங்கிய முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் மெர்சிடஸ் அணிச் சார்பில் களமிறங்கியவர் இராண்டாவது இடத்தை பிடித்தார்.
ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கார்டோ மூன்றாவதாக வந்தார். நான்கு முறை சாம்பியன் வென்ற ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் பெராரி அணி சார்பில் களமிறங்கியவர் 4-வது இடம் பிடித்தார்.
போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் செர்ஜியோ பெரேஸ் 6-வது இடத்தையும், ஈஸ்ட்பான் ஒகான் 10-வது இடத்தையும் பிடித்தனர்.
