ஐபிஎல்   ஏலத்தில்   ரூ.3 கோடிக்கு தமிழக  வீரர் நடராஜன்  தேர்வு  செய்யப்பட்டர் . மேலும், அதிக விலைக்கு தேர்வான ஒரே வீரர் என்ற பெருமையை  தட்டி சென்றார் தமிழக  வீரர் நடராஜன் 

தமிழக  வேகப்பந்து  வீச்சாளர் :

சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். சிறந்த தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை  ரூ.3 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. மற்றொரு தமிழக வீரரான எம். அஸ்வினை தில்லி அணி ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.   தமிழகத்திலிருந்து  தேர்வு செய்யப் பட்டவர்களில்  அதிக  விலைக்கு  தேர்வு செய்யப்பட்ட  ஒரே வீரர்   நடராஜன்  என்பது  குறிப்பிடத்தக்கது.

இதுதவிர முரளி விஜய் (பஞ்சாப்) ரூ. 3 கோடிக்கும் அஸ்வின் (புணே) ரூ. 7.50 கோடிக்கும் ஏற்கெனவே தேர்வாகியுள்ளார்கள்

தேர்வு  செய்யவில்லை :

தமிழக வீரர்களான அபினவ் முகுந்த், பத்ரிநாத் ஆகியோரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை என்பது கூடுதல் தகவல்