National rifle shooters Five golden pearls in Punjab

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் முட்கில் தங்கம் வென்றுள்ளார்.

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் தனிநபர் பிரிவில் 457.6 புள்ளிகளுடன் அஞ்சும் முட்கில் முதலிடம் பிடித்தார்.

இந்தப் போட்டியின் அணிகளுக்கான பிரிவிலும் முட்கில் தங்கம் வென்றதையடுத்து இப்போட்டியில் இதுவரை அவர் வென்ற மூன்று தங்கத்தையும் சேர்த்து, அவரது மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தப் பிரிவில் ஜம்மு காஷ்மீரின் ஷ்ரேயா சக்ஸனா 452.9 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தை பிடித்தார்.

ராணுவ வீராங்கனையான ராஜ் செளதரி 439.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தை பிடித்தார்.

இதனிடையே, 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் அணிகளுக்கான பிரிவில் அஞ்சும் முட்கில், தில்ரீன் கில், அவ்னிஷ் கெளர் சித்து ஆகியோர் அடங்கிய பஞ்சாப் அணி 1730 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றியது.

மகாராஷ்டிரம் 1714 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், கேரளம் 1711 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றன.