National Junior Basketball Rajasthan Men and Women Women enter into final
தேசிய ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு ராஜஸ்தான் ஆடவர் மற்றும் கேரள மகளிர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
தேசிய ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன் போட்டி லூதியானாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இதில், ஆடவர் அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில், 107-84 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்.
அதேபோன்று, மகளிர் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் கேரள - கர்நாடக அணிகள் மோதின. கேரளம் 68-66 என்ற புள்ளிக்கணக்கில் கர்நாடகத்தை வென்று இறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் ஆடவர் மற்றும் கேரள மகளிர் அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேரியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தன.
