Nada and pliskova are first in rank list

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் போட்டித் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 28-ஆம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குவதை முன்னிட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான போட்டித் தரவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் முதல் இடத்தையும், பிரிட்டனின் ஆன்டி முர்ரே இரண்டாவது இடத்தையும், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மூன்றாம் இடத்தையும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் நான்காம் இடத்தையும், குரோஷியாவின் மரின் சிலிச் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா முதலிடத்தையும், ருமேனியாவின் சைமோனா ஹேலப் இரண்டாம் இடத்தையும், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா மூன்றாம் இடத்தையும், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா நான்காம் இடத்தையும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

ரஃபேல் நடாலும், கரோலினா பிளிஸ்கோவாவும் ஏற்கனவே சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர் என்பது கொசுறு தகவல்.