Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை…

mumbai state-advanced-to-the-final-beating
Author
First Published Jan 6, 2017, 11:44 AM IST


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் முதலாவது அரையிறுதியில் தமிழகத்தை எதிர்கொண்ட மும்பை, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழகம், 115.2 ஓவர்களில் 305 ஓட்டங்கள் எடுத்தது. இந்திரஜித் அதிகபட்சமாக 64 ஓட்டங்கள் எடுத்தார்.

மும்பை தரப்பில் ஷர்துல், அபிஷேக் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய மும்பை 150.3 ஓவர்களில் 411 ஓட்டங்கள் குவித்தது. ஆதித்யா தாரே அதிகபட்சமாக 83 ஓட்டங்கள் விளாசினார்.

தமிழகத்தின் தரப்பில் விஜய் சங்கர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம், 78 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்தது. அபினவ் முகுந்த் (122), பாபா இந்திரஜித் (138) அபாரமாக ஆடினர்.

மும்பையின் பல்வீந்தர், கோஹில் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 251 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை 62.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக் கண்டது. அதிகபட்சமாக பிரித்வி ஷா 120 ஓட்டங்கள் விளாசினார்.

தமிழகத்தின் ஒளஷிக் ஸ்ரீநிவாஸ் 2 விக்கெட் எடுத்தார்.

இந்த வெற்றியை அடுத்து, ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் குஜராத் - மும்பை அணிகள் மோதவுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios