இலங்கையில் முத்தரப்பு டி20 தொடர் நடந்துவருகிறது. இத்தொடரின் வர்ணனைக்காக சஞ்சய் மஞ்சரேக்கர், இலங்கை சென்றுள்ளார். கொழும்புவில் போட்டிகள் நடந்துவருகின்றன.

கொழும்புவில் தங்கியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், கொழும்புவின் இயற்கை எழிலான பகுதியை புகைப்படம் எடுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மும்பையை நன்றாக தேய்த்து கழுவினால் ஒரு கொழும்பு கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Give Mumbai a nice scrub and you will get Colombo.<a href="https://twitter.com/hashtag/AlreadySwachhSriLanka?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AlreadySwachhSriLanka</a> <a href="https://t.co/zRbIsrt837">pic.twitter.com/zRbIsrt837</a></p>&mdash; Sanjay Manjrekar (@sanjaymanjrekar) <a href="https://twitter.com/sanjaymanjrekar/status/974232685232050176?ref_src=twsrc%5Etfw">March 15, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

இதைக்கண்ட மும்பைவாசிகள், சஞ்சய் மஞ்சரேக்கரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மஞ்சரேக்கரின் கருத்துக்கு அதிரடியான பதிலடிகளை சமூக வலைதளங்களில் கொடுத்து வருகின்றனர்.

சஞ்சய் மஞ்சரேக்கரை விமர்சித்து பதிவிடப்பட்ட சில டுவீட்கள்:

* உனாட்கட்டிற்கு 11 கோடி கொடுங்கள். பிசிசிஐ அல்லது ஐபிஎல் தங்கள் நிதியிலிருந்து ஜுஹூ கடற்கரையை சுத்தம் செய்யலாமே.

* சஞ்சய் மஞ்சுரேக்கரைக் கழுவி சுத்தம் செய்தாலும் சச்சின் டெண்டுல்கரை பெற முடியுமா? மும்பை மும்பைதான் அது எப்படியிருக்கிறதோ அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். மும்பைதான் இருப்பதிலேயே கொஞ்சம் சுத்தமான நகரம்.

* சஞ்சய் மஞ்சுரேக்கரை தேய்த்து கழுவினால் சஞ்சய் பாங்கர் கிடைப்பார்.

* ட்வீட்கள் மட்டும்தான். உங்கள் தாய்நிலத்தை மேம்படுத்த பணி செய்யாதீர்கள். படுமோசமான வேஷத்தனம். 

இவ்வாறு சஞ்சய் மஞ்சரேக்கரை சமூக வலைதளங்களில் மும்பைவாசிகள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.