Mumbai removal from office permanent members Board Action
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) புதிய சட்டத்தின் படி, மும்பை கிரிக்கெட் சங்கம் நிரந்தர உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது.
பிசிசிஐயின் புதிய சட்டத்தை, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழு இறுதி செய்துள்ளது. இதன்படி, மும்பை தனது நிரந்தர உறுப்பினர் பதவியையும், வாக்குரிமையையும் இழந்துள்ளது.
மறுபுறம், மணிப்பூர், மேகாலயம், மிஸாரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்தும், வாக்குரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, உத்தரகண்ட் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலங்களுக்கும் முழு உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி, ஒரு மாநிலத்துக்கு ஒரு முழு உறுப்பினர் அந்தஸ்து மட்டுமே அளிக்கப்படும்.
எனவே, மும்பை கிரிக்கெட் சங்கம் இனி, பரோடா மற்றும் சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கங்களைப் போன்று துணை உறுப்பினராகத் தொடரும். அவற்றுக்கு சுழற்சி முறையில் வாக்குரிமை அளிக்கப்படும்.
பிசிசிஐ கூட்டங்களில் மும்பை கிரிக்கெட் சங்கத்தினர் பங்கேற்கலாம். ஆனால், அவர்களால் வாக்களிக்க இயலாது.
