டி20 அணியிலிருந்து தோனி நீக்கப்பட்ட தகவலை அவரிடம்  கூறியபோது அவர் எப்படி ரியாக்ட் செய்தார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து மோசமான ஃபார்மில் இருக்கும் சீனியர் வீரர் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

தோனி அண்மைக்காலமாக பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். ஒரு போட்டியில் கூட சோபிக்கவில்லை. ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய தோனி, அதன்பிறகு இங்கிலாந்து தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என எதிலுமே சரியாக ஆடவில்லை. தோனி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை வரை தான் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே 2020ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையில் அவர் ஆடுவதற்கான வாய்ப்பே கிடையாது என்பதுதான் உண்மை. எனவே அவரது இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 2020 டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே ஒரு வீரரை உருவாக்க வேண்டும். அதனால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தோனி நீக்கப்பட்டதால், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழ தொடங்கியுள்ளன. இந்நிலையில், தோனி அணியிலிருந்து நீக்கப்பட்டதை அவரிடம் தெரிவித்தபோது அவர் எப்படி ரியாக்ட் செய்தார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

மாற்று விக்கெட் கீப்பரை உருவாக்கும் முயற்சியாக அணியிலிருந்து தோனி நீக்கப்பட்டு இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவதாக தெரிவித்ததற்கு, அதை மனமார தோனி வரவேற்றதாக பிரசாத் தெரிவித்துள்ளார். வரவேற்காமல், என்னைத்தான் சேர்க்க வேண்டும் என்று அடமா பிடிப்பார்..?