ஐபிஎல் 11வது சீசன் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்டதால், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களம் காண்கின்றன. அதனால் தோனியின் ரசிகர்களும் சென்னை அணியின் ரசிகர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதல் போட்டியே நடப்பு சாம்பியன் மும்பைக்கும் முன்னாள் சாம்பியன் சென்னைக்கும் நடப்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஐபிஎல் தொடர் நெருங்கிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த முதல் 10 வீரர்களை பார்ப்போம்..

1. கிறிஸ் கெய்ல் - வெஸ்ட் இண்டீஸ்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்காக கெய்ல் ஆடியுள்ளார். 101 போட்டிகளில் ஆடியுள்ள கெய்ல், 5 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஆடுகிறார்.

2. விராட் கோலி - இந்தியா

பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி, 149 போட்டிகளில் ஆடி 4 சதங்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

3. டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா

ஹைதரபாத் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர், 114 போட்டிகளில் விளையாடி, 3 சதங்களை அடித்துள்ளார்.

4. டிவில்லியர்ஸ் - தென்னாப்பிரிக்கா

பெங்களூரு அணிக்காக ஆடும் டிவில்லியர்ஸ், 129 போட்டிகளில் ஆடி 3 சதங்களை அடித்துள்ளார்.

5. பிரண்டன் மெக்கல்லம் - நியூசிலாந்து

ஐபிஎல் வரலாற்றின் முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியவர் பிரண்டன் மெக்கல்லம். 103 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் அடித்துள்ளார்.

6. வீரேந்திர சேவாக் - இந்தியா

104 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 2 சதங்கள் அடித்துள்ளார் சேவாக். டெல்லி, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய சேவாக், தற்போது பஞ்சாப் அணியின் ஆலோசகராக உள்ளார்.

7. ஷேன் வாட்சன் - ஆஸ்திரேலியா

102 ஐபிஎல் போட்டிகளில் ஆடி, 2 சதங்கள் அடித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய வாட்சன், இம்முறை சென்னை அணிக்கு ஆடுகிறார்.

8. முரளி விஜய் - இந்தியா

100 போட்டிகளில் ஆடி இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

9. ஆடம் கில்கிறிஸ்ட் - ஆஸ்திரேலியா

80 போட்டிகளில் ஆடி 2 சதங்கள்.

10. ஹாசிம் ஆம்லா - தென்னாப்பிரிக்கா

வெறும் 16 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் அடித்துள்ளார் ஆம்லா.