டெல்லியில் நடைபெற்ற சல்வான் மாரத்தான் போட்டியில் 2,800-க்கும் மேற்பட்ட பார்வையற்ற, மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சல்வான் மாரத்தான் போட்டியில் நாடெங்கிலும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 52 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
21-ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த மாரத்தானில், குஜராத், ஹிமாசல பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களோடு, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த மாரத்தான் போட்டியில் 2,800-க்கும் மேற்பட்ட பார்வையற்ற, மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா, தடகள வீராங்கனை மன்பிரீத் கெüர் ஆகியோரும் இந்த மாரத்தானில் பங்கேற்றனர்.
பார்வையற்ற, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 4.5 கி.மீ., 14 வயதுக்குள்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு 4.5 கி.மீ., 16 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு 6 கி.மீ., 18 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 8 கி.மீ. என்ற அடிப்படையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
