Asianet News TamilAsianet News Tamil

யாரு வேணும்னா ஜெயிச்சுட்டு போகட்டுங்க!! எனக்கு இதுதான் பெருசு.. பக்கா ஃபீல்டரின் பளீச் கருத்து

mohammad kaif opinion about dhoni batting against delhi
mohammad kaif opinion about dhoni batting against delhi
Author
First Published May 1, 2018, 1:31 PM IST


சென்னை டெல்லி இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டி, மிகவும் பரபரப்பானதாக அமைந்தது. வாட்சன், தோனியின் அதிரடி பேட்டிங். 212 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கரின் மிரட்டலான பேட்டிங் என நேற்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

புனே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அவர் அவுட்டாகி சென்றதும் அந்த பணியை ஏற்றுக்கொண்ட தோனி, அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். டிரெண்ட் போல்ட் வீசிய 17வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார்.

வயதை காரணம் காட்டி தோனி மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு இந்த ஐபிஎல் தொடரில், தனது பேட்டிங்கின் மூலம் தக்க பதிலடி கொடுத்து வருகிறார். 

இந்த போட்டி குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் வீரர் முகமது கைஃப், 213 ரன்கள் என்ற இலக்கு எளிதானதல்ல. ஆனாலும் ரிஷப் பண்ட்டும் விஜய் சங்கரும் இலக்கை நெருங்கிவிட்டனர். ஐபிஎல்லில் முதல் போட்டியிலேயே நிகிடி சிறப்பாக பந்துவீசினார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Pant and Shankar made it a close contest but 213 was never going to be easy. Lungi Ngidi was brilliant on debut and he should be a regular in the next few matches at least. But the best thing for me was Dhoni&#39;s hitting in the first innings <a href="https://twitter.com/ChennaiIPL?ref_src=twsrc%5Etfw">@ChennaiIPL</a> <a href="https://twitter.com/hashtag/CSKvDD?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CSKvDD</a></p>&mdash; Mohammad Kaif (@MohammadKaif) <a href="https://twitter.com/MohammadKaif/status/991016454404231168?ref_src=twsrc%5Etfw">April 30, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அவருக்கு தொடர்ச்சியாக சில வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில், அனைத்தையும்விட, முதல் பேட்டிங்கில் தோனி அதிரடியாக ஆடியதே மிகச்சிறந்த விஷயம் என கைஃப் பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios