எம்.சி.சி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் முதல் நாளில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அணி வெற்றிப் பெற்றது.

எம்.சி.சி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அணியும் மோதின. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அணியைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றது பிபிசிஎல் அணி.

அதேபோன்று இராணுவ வெலன் அணியும், ஹாக்கி ஓடிஸா அணியும் மோதிய ஆட்டத்தில் இரு அணிகளும் 4-4 என்ற கோல்களைப் பெற்று சமனில் முடித்தன.