MCC - Murugappa Hockey Bengaluru Indian Railway wins the fifth day
எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் ஐந்தாவது நாளில் பெங்களூரு, இந்தியன் இரயில்வே அணிகள் வெற்றிப் பெற்றன.
எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஐந்தாவது நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹாக்கி பெங்களூரு அணியும், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி தரப்பில் ரகுநாத், சந்தீப் கே.சிங், ராஜ்குமார் பால் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதில், 3-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியைத் தோற்கடித்தது ஹாக்கி பெங்களூரு அணி.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்தியன் இரயில்வே அணியும், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியும் மோதின.
இரயில்வே அணி தரப்பில் ராஜூ பால் இரு கோல்களையும், கரண் பால் சிங், பிரதீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
இதில், 4-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியைத் தோற்கடித்தது. இரயில்வே அணி.
