Maxwell takes to lead Kings 11

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு சீசன்களிலும் பஞ்சாப் அணி மிக மோசமாக விளையாடியது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த டேவிட் மில்லர் பாதியிலேயே நீக்கப்பட்டு புதிய கேப்டனாக முரளி விஜய் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வரும் சீசனுக்கு கிளென் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின்போது இங்கிலாந்து அணிக்கு தலைமை வகித்த இயான் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இரு முறை டி20 உலகக் கோப்பையை வென்று தந்த டேரன் சமி ஆகியோர் அந்த அணியில் இடம் பெற்றிருந்தாலும், மேக்ஸ்வெலுக்கு முன்னுரிமை அளித்துள்ளது பஞ்சாப் அணி.