ரியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் புதிய உலக சாதனையோடு தங்கத்தை வென்றார் சேலத்தை அடுத்த பெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன்.

மாரியப்பனின் இந்த அசாதாரண உலக சாதனை தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.

மாரியப்பன் தங்க பதக்கம் வென்ற அன்றே அவருக்கு பாராட்டு கடிதமும் ரூ.2 கோடி பரிசு தொகையும் கேட்டுகொண்டால் தமிழக அரசின் வேலையும் வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்று வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் சசிகலாவை மாரியப்பன் அவரது கோச்சுடன் சென்று சந்தித்தார்.

அதனையடுத்து இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் ரூ.2 கோடி ரூபாய்க்கான காசோலை மற்றும் அரசின் பாராட்டு பத்திரத்தையும் வழங்கினார்.

இதனை பெற்று கொண்ட மாரியப்பன் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்ததோடு நேராக போயஸ் கார்டன் வந்து சின்னம்மா சசிகலாவிடம் ஆசி பெற்று சென்றார்.