Marine Chile Kevin Andersons participation in the Maharashtra Open tennis tournament

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச், உலகின் 14-ஆம் நிலை வீரரான கெவின் ஆன்டர்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டி மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதில், உலகின் ஆறாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், உலகின் 14-ஆம் நிலை வீரரான தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் நான்கு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் மரின் சிலிச், ஆன்டர்சன், தரவரிசையில் 20-வது இடத்தில் இருக்கும் நடப்புச் சாம்பியன் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பெளதிஸ்டா அகுட், 42-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தின் ராபின் ஹஸ் ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் தவிர தரவரிசையில் 71-வது இடத்தில் இருக்கும் தைவானின் யென்-சன் லு, 77-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர்களான ஜெரிமி சார்டி, 81-வது இடத்தில் இருக்கும் பியரே ஹியூஜஸ் ஹெர்பர்ட், 91-வது இடத்தில் இருக்கும் கில்ஸ் சிமன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டுவந்த இந்த டென்னிஸ் போட்டி, எதிர்வரும் சீசன் முதல் புணே நகருக்கு மாற்றப்பட்டது கொசுறு தகவல்.