Marin Chinnichu and Jills Muller are fighting in semirfinals

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் வென்ற மரின் சிலிச்சும், ஜில்ஸ் முல்லரும் அரையிறுதியில் மோதவுள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு முந்தைய பயிற்சிப் போட்டியான குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் மரின் சிலிச், அமெரிக்காவின் டொனால்டு யங்குடன் மோதியதில் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் டொனால்டு யங்கை தோற்கடித்தார்.

குயின்ஸ் கிளப் போட்டியில் 4-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் சிலிச், அது குறித்து கூறியது:

“இந்த வாரம் முழுவதும் சிறப்பாக ஆடியிருக்கிறேன். எனது சர்வீஸை இழக்காமல் விளையாடிய மற்றொரு ஆட்டம் இது. அதனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்றார்.

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத்தில் இந்த சீசனில் சிலிச் வென்ற 2-வது ஏடிபி பட்டமாக இது இருக்கும்.

மற்றோரு வீரரான ஜில்ஸ் முல்லர் தனது காலிறுதியில் அமெரிக்காவின் சாம் கியூரியுடன் மோதினார்.

இதில், 6-4, 7-6 (5) என்ற நேர் செட்களில் சாம் கியூரியைத் தோற்கடித்து வென்றார்.

காலிறுதியில் வென்ற குரோஷியாவின் மரின் சிலிச்சும், லக்ஸம்பர்க்கின் ஜில்ஸ் முல்லரும் அரையிறுதில் மோதவுள்ளனர்.