Magnificent Goalie without giving up the top spot
ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 3-ஆவது இடத்தில் இருக்கிறார்.
இந்தியாவின் ரோஹித் சர்மா 12-ஆவது இடம், மகேந்திர சிங் தோனி 13-ஆவது இடத்தில் தங்களின் தரவரிசையை தக்கவைத்துக் கொண்டனர்.
ஷிகர் தவன் ஓர் இடத்தை இழந்து 15-ஆவது இடத்தில் உள்ளார்.
நியூஸிலாந்து தொடரில் 262 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் முதலிடத்தைப் பிடிப்பது இது 10-ஆவது முறையாகும்.
2009 முதல் தற்போது வரையிலான காலங்களில் டிவில்லியர்ஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள்ளேயே இருக்கிறார்.
முன்னதாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அக்ஷர் படேல் 11-ஆவது இடத்தில் உள்ளார்.
அமித் மிஸ்ரா 13-ஆவது இடத்திலும், அஸ்வின் 20-ஆவது இடத்திலும் உள்ளனர். இந்தியர்களில் வேறு யாரும் முதல் 20 இடங்களில் இல்லை.
