டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியின் விளையாடாத கேப்டனாக மகேஷ் பூபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கேப்டனாக இருந்த ஆனந்த் அமிர்தராஜ், அந்தப் பதவியில் தொடர விரும்புவதாக தெரிவித்திருந்தபோதும், அதை ஏற்க அகில இந்திய டென்னிஸ் சங்கம் மறுத்துவிட்டது.
நியூஸிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியோடு அமிர்தராஜ் விடை பெறுகிறார். அதன்பிறகு மகேஷ் பூபதி புதிய கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார்.
இது தொடர்பாக அகில இந்திய டென்னிஸ் சங்க பொதுச் செயலர் ஹிரோன்மாய் சாட்டர்ஜி கூறியதாவது:
“எல்லோரும் கேப்டனாக வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஒரு பதவியை ஒருவரே எப்போதும் வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது. புதிய கேப்டனாக பொறுப்பேற்க முடியுமா என மகேஷ் பூபதியிடம் கேட்டேன். அவரும் சரி என்றார். அதைத் தொடர்ந்து அவர் இப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்' என்றார்.
