Madrid Open Tennis Winner of the Championship for the third time

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக். நாட்டின் பெட்ரா விட்டோவா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவாவும் (செக்குடியரசு), கிகி பெர்டென்சும் (நெதர்லாந்து) மோதினர். 

இந்தப் போட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் நீண்ட போராட்டத்திற்கு பின் நெதர்லாந்தின் கிக்கி பெர்டன்ஸை 7-6, 4-, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார் 10-ஆம் நிலை வீராங்கனையான விட்டோவா. அதன்மூலம் அவர் சாம்பியன் வென்றார்.

விட்டோவா ஏற்கெனவே 2011, 2015-இல் மாட்ரிட் ஓபன் பட்டங்களை வென்றவர். நிகழாண்டில் அவர் பெறும் 4-வது பட்டமாகும். பெர்டன்ஸ் ஏற்கெனவே மரியா ஷரபோவா, கரோலினா வோஸ்னியாக்கியை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மாட்ரிட் ஓபன் பட்டத்தை அதிக முறை ருசித்த வீராங்கனை என்ற சிறப்பை கிவிடோவா பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தரவரிசையில் 10–வது இடத்தில் இருந்து 8–வது இடத்துக்கு முன்னேறுகிறார்.