Lewis Hamilton was the first to get the Formula-1 car racing

கனடா கிராண்ட்ப்ரீ ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பெற்றார். இவர் மெர்ஸிடஸ் ஒட்டுநர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கனடா கிராண்ட்ப்ரீ ஃபார்முலா-1 கார் பந்தயம் கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைப்பெற்றது.

இந்தப் போட்டியில் மெர்ஸிடஸ் ஓட்டுநர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார். மெர்ஸிடிஸின் மற்றொரு ஓட்டுநரனான வாலெட்டரி போட்டாஸ் இரண்டாவது இடத்தையும், ரெட்புல் டிரைவர் டேனியல் ரிச்சியார்டோ மூன்றாவது இடத்தையும், ஃபெராரி ஓட்டுநர் செபாஸ்டியன் வெட்டல் நான்காவவது இடத்தையும், ஃபோர்ஸ் இந்தியா ஓட்டுநர் செர்ஜிகோ பெரெஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி குறித்து ஹாமில்டன் பேசியது:

'இங்கே குவிந்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. ஒவ்வொரு ஆண்டும் எனது ஆற்றல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதனால் இங்கு தொடர்ந்து வியக்கத்தக்க வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கிறேன்' என்றார்.

ஓட்டுநர்கள் வரிசையைப் பொறுத்தவரையில் செபாஸ்டியன் வெட்டல் 141 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 129 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், வாலெட்டரி போட்டாஸ் 93 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்றப் போட்டியில் ஹாமில்டன் பெற்ற 6-ஆவது வெற்றி இது. அதேநேரத்தில் இந்த சீசனில் மூன்றாவது வெற்றியைப் பெற்றுள்ள ஹாமில்டன், ஒட்டு மொத்தமாக 56-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கிறார்.