பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் இன்று திடீரென மரணம் அடைந்தார். 90 கிட்ஸ்களின் ஹீரோவாக திகழ்ந்த ஹல்க் ஹோகன் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What Is The Reason For Hulk Hogan's Death: பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan)இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. 1980களில் தொழில்முறை மல்யுத்தத்தின் முகமாக இருந்த ஹல்க் ஹோகன், 71 வயதில் காலமானார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஃபுளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் ஹல்க் ஹோகன் காலமானதாக அவரது மேலாளர் கிறிஸ் வோலோவை மேற்கோள் காட்டி NBC செய்திகள் தெரிவித்துள்ளது.

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மரணம்

ஹல்க் ஹோகன் தன்னுடைய வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாக தகவவ் வெளியாகி உள்ளது. ஹல்க் ஹோகன் அண்மையில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டதற்காக சிகிச்சை பெற்றபோது அவர் கோமாவில் சென்றுவிட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் அவர் நலமுடன் இருந்ததாக அவருடைய மனைவி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஹல்க் ஹோகன் திடீரென உயிரிழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மல்யுத்த உலகின் சூப்பர் ஸ்டார்

WWE எனப்படும் மல்யுத்த விளையாட்டு இன்று உலகளவில் பிரபலமானதற்கு முக்கிய காரணம் ஹல்க் ஹோகன் என்றால் அது மிகையாது. ஹல்க் ஹோகனின் உண்மையான பெயர் டெர்ரி ஜீன் போலியா ஆகும். 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளில் மல்யுத்தத்தின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய அவர் அப்போதே ஒரு போட்டிக்கு மட்டும் ஒரு மில்லியன் டாலர் ஊதியம் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

உலகம் முழுவதும் கொண்டாடிய ரசிகர்கள்

ஹல்க் ஹோகனின் "Hulkamania" என்ற அடையாளம் அவரை உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாட வைத்தது. ஹல்க் ஹோகன் பல்வேறு மல்யுத்த சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். WWE ஹால் ஆஃப் ஃபேமில் (WWE Hall of Fame) இவர் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.