leading ipl run scorer virat kohli

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 70 ரன்கள் குவித்த விராட் கோலி, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், 182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி 70 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதில் 70 ரன்களை குவித்ததன்மூலம், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மைல்கல்லை கோலி எட்டியுள்ளார்.

ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இருந்துவந்த சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரில் சுரேஷ் ரெய்னா பெரிதாக சோபிக்கவில்லை. இதுவரை இந்த தொடரில் 313 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் கோலி 466 ரன்களை குவித்துள்ளார்.

160 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி, 4 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 4884 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். 171 போட்டிகளில் 4853 ரன்கள் குவித்துள்ள சுரேஷ் ரெய்னா இரண்டாமிடத்திலும் 4474 ரன்களுடன் ரோஹித் சர்மா மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்துள்ள முதல் 5 வீரர்களின் பட்டியல்