Leading India 152 runs Score of 603
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 210 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 603 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்ததன் மூலம் ஆஸ்திரேலியாவைக் விட இந்தியா 152 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.
ராஞ்சியில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து, 137.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 451 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 178 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில், ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 3-ஆவது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 130 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில், 4-ஆவது நாள் ஆட்டத்தை புஜாரா 130 ஓட்டங்களுடனும், ரித்திமான் சாஹா 18 ஓட்டங்களுடனும் தொடங்கினர். நிதானமாக ஆடி இந்த ஜோடி, அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 161 ஓவர்களில் 435 ஓட்டங்களை எட்டியிருந்தது.
இதனிடையே, தேநீர் இடைவேளையின் பிறகு 214 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் ரித்திமான் சாஹா சதம் கடந்தார். இது, டெஸ்ட் போட்டியில் அவரது 3-ஆவது சதமாகும்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த புஜாரா, 521 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் அடித்தார். எனினும், அவர் 202 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த ஜடேஜா, சாஹாவுடன் கைகோத்தார். ஆனால், 117 ஓட்டங்கள் எடுத்திருந்த சாஹா, ஓ'கீஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து இஷாந்த் சர்மா களத்துக்கு வர, மறுமுனையில் அதிரடி காட்டிய ஜடேஜா, 51 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார்.
இப்படி, 210 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார்.
ஜடேஜா 54, இஷாந்த் சர்மா 0 ஓட்டங்கள் இன்றியும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
கடைசி நாளான இன்று, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 8 விக்கெட்டுகளைக் கொண்டு 129 ஓட்டங்களை எடுத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகைச் சூடும்.
