பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் போலந்து வீரரை வீழ்த்தி இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டி பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் தனது காலிறுதியில் போலந்தின் மிச்செல் ரோகல்ஸ்கியுடன் மோதினார்.

இதில் 20-22, 21-18, 21-15 என்ற செட் கணக்கில் மிச்செல் ரோகல்ஸ்கியை தோற்கடித்தார் லக்ஷ்யா சென்.

இன்று நடைபெறும் அரையிறுதியில் இலங்கையின் தினுகா கருணாரத்னேவை சந்திக்கிறார் லக்ஷ்யா சென்.