Korea Open Super Series Sindhu Samir Satvik Chairaj - Chirac progress to quarter-finals

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா, சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் நிட்சான் ஜின்டாபோலுடன் மோதினார்.

இதில், 22-20, 21-17 என்ற நேர் செட்களில் நிட்சான் ஜின்டாபோலை தோற்கடித்தார் சிந்து.

சிந்து தனது காலிறுதியில் ஜப்பானின் மினட்சு மிடானியை எதிர்கொள்கிறார்.

அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா, ஆங்காங்கின் வாங் விங் கி வின்சென்டுடன் மோதினார்.

இதில், 21-19, 21-13 என்ற நேர் செட்களில் வாங் விங் கி வின்சென்டை வீழ்த்தினார் சமீர் வர்மா.

சமீர் வர்மா தனது காலிறுதியில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 23-21, 16-21, 21-8 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லீ ஜீ-லீ யங் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை தங்களின் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் டகேஷி கமுரா - கெய்கோ சோனோடா இணையை எதிர்கொள்கிறது.