இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட்டே தேவை. இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தலாக ஆடிய இந்திய அணி, இந்த டெஸ்ட் தொடரில் முதல் வெற்றியை ருசிக்க உள்ளது. 

இந்த டெஸ்ட் போட்டியில் பல அரிய சாதனைகளும் சம்பவங்களும் நடந்துள்ளன. அதில் ஒன்றுதான், ஒரே போட்டியில் இரு வீரர்கள் 7 கேட்ச்கள் பிடித்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தலா 7 கேட்ச்சுகளை பிடித்துள்ளனர். 

விக்கெட் கீப்பர் அல்லாத ஃபீல்டர் 7 கேட்ச்களை பிடிப்பது அரிய விஷயம். ராகுல் 7 கேட்ச்களை பிடித்துள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த ஃபீல்டர்களின் பட்டியலில் இரண்டாமிடத்தைல் 5 வீரர்களுடன் பகிர்கிறார் ராகுல். முதலிடத்தில் 8 கேட்ச்களுடன் ரஹானே முதலிடத்தில் உள்ளார். 

இந்த பட்டியலில் ராகுல் 8 கேட்ச்களுடன் ரஹானேவுடன் முதலிடத்தை பகிர்ந்திருப்பார். அது தடைபட்டதற்கு கோலி காரணமாகிவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்லிப்பில் நிற்பவர்களுக்கு இடையில் புரிதல் அவசியம். அவரவர்க்கு வரும் கேட்ச்சை அவரவர் பிடிக்க வேண்டும். அதைவிடுத்து குறுக்கே புகுந்தால் பல நேரங்களில் கேட்ச்கள் தவறிவிடும்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் போப் அடித்த பந்து இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற ராகுலுக்கு நேராக சென்றது. அதை கோலி தாவி பிடித்துவிட்டார். ஆனால் கேட்ச்சை தவறவிடவில்லை. அந்த கேட்ச்சை கோலி பிடித்திருந்தாலும்கூட, அது ராகுலுக்கு சென்ற கேட்ச். 

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் அடித்த பந்து மூன்றாவது ஸ்லிப்பில் நின்ற கோலிக்கு சென்றது. அதை நான்காம் ஸ்லிப்பில் நின்ற ரஹானே பிடிக்க முயன்று தவறவிட்டபோது, ரஹானேவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார் கோலி. அது எனது கேட்ச் என கூறி கோலி அதிருப்தியை வெளிப்படுத்தினார். இப்போது ராகுலுக்கு சென்ற கேட்ச்சை அவர் குறுக்கே புகுந்து பிடித்துள்ளார். அந்த கேட்ச்சை தவறவிடாமல் பிடித்துவிட்டார் என்றாலும் கூட, அவருக்கு ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா..?