Kohli top spot for ICC ODI rankings

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலின் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புதிய பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதன்படி, பேட்ஸ்மேன்கள் பிரிவில் கேப்டன் விராட் கோலி 862 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும்போது இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்திலும் இருந்தனர். கோலி மூன்றாவது இடத்தில் இருந்தார்.

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்கள் விளாசியதை அடுத்து கோலி இந்த ஏற்றம் கண்டுள்ளார்.

இதேபோல், இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவன் ஐந்து இடங்கள் ஏற்றம் கண்டு 10-வது இடத்துக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், அணியின் சக வீரர்களான ரோஹித் சர்மா 13-வது இடத்துக்கும், தோனி 14-ஆவது இடத்துக்கும் பின்தங்கினர். யுவராஜ் சிங் ஆறு இடங்கள் முன்னேறி 88-வது இடத்துக்கு வந்துள்ளார்.